
இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றிருந்தது. அதன்பின்னர் கோப்பையை வெல்வது என்பது இந்திய ரசிகர்களுக்கு கனவாகவே உள்ளது. விராட் கோலிக்கும், கோப்பைக்கும் ராசியே இல்லாதது போன்று மாறிவிட்டது. இதன் பின்னர் ரோகித்தின் கைகளுக்கு சென்ற இந்திய அணி, சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்று ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.
2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை எடுத்துக்கொண்டால் இந்திய அணியில் ரோஹித், விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல், ஹர்திக் தலைமையில் புதிய படை உருவாகியுள்ளது. ஒருபுறம் சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், உம்ரான் மாலிக் என இளம் வீரர்கள், மற்றொருபுறம் பாண்டியா, கேஎல் ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் என புதுப்பொழிவு பெறவுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார். அதில், “சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது. 12 - 15 மாதங்களுக்குள் அவர் காட்டிய ஆட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதுவும் ஆஸ்திரேலிய போன்ற கடினமான களத்தில் அவர் எந்தவித பயமும் இல்லாமல் ஷாட்களை தேர்வு செய்த விதம் கிராண்ட் மாஸ்டர் போல இருந்தது.