
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் பிரெட் லீ. இவரது பந்துகளில் ஒருவர் சிக்ஸர் அடித்தாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படும். அந்த அளவுக்கு அபாயகரமான பந்துவீச்சாளராக இவர் திகழ்ந்து வந்தார். பேட்ஸ்மேன்களை அடிக்கடி சீண்டி, அந்த சமயத்தில் பவுன்சர் வீசி மிரட்டுவதுதான் பிரெட் லீயின் தனிப்பட்டகுணம். இவரது பவுன்சருக்கு இதுவரை எந்த பேட்ஸ்மேனும் சரியான பதில் சொன்னதே கிடையாது என்பதுதான் வரலாறு.
அப்பேர்ப்பட்ட ஜாம்பவான் பந்துவீச்சாளரை ஒருவர் பயப்பட வைத்திருக்கிறார். அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்தான். 1999 முதல் 2014ஆம் ஆண்டுவரை தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் ஜாம்பவம் பந்துவீச்சாளர்களை நடுங்க வைத்திருக்கிறார். முதல் பந்தில் பவுண்டரி அடிப்படிதான் இவரது ஸ்டெய்ல். மேலும், அபாயகரமான பௌலர்களை துவம்சம் செய்து கெத்து காட்டுவதுதான் இவரது வாடிக்கை.
இதுவரை மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேவாக், 23 சதங்கள், 32 அரை சதங்கள் உட்பட 8586 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார். இவரது பேட்டிங்கை சம காலத்தில் எந்த ஒரு வீரருடனும் ஒப்பிட முடியாது. ஆஃப் திசையில் இவரைப் போல இதுவரை யாரும் அபாரமாக விளையாடியது கிடையாது என்பதுதான் உண்மை