
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாக உலகின் அனைத்து இடங்களிலும் தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் ஏற்கனவே ஜாம்பவானாக நிரூபித்துள்ளார்.
இருப்பினும் 2019க்குப்பின் பள்ளத்தாக்கை போன்ற மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக அடுத்த சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
அதுபோக தொடர்ச்சியாக விளையாடிய களைப்பு ஆட்டத்தில் தெரிவதால் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து வெளியேறிய சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனையை பின்பற்றாத அவர் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்தார். ஆனால் சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார்.