
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு ஒலிவியர் டேவிஸ் - கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒலிவியர் டேவிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ கில்க்ஸும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 10 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களுக்கும், ஹக் வெய்ப்ஜென் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் 50 ரன்களைச் சேர்த்த கையோடு டேவிட் வார்னர் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேனியல் கிறிஸ்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் நேசர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.