
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 53 ரன்களில் லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்க, 68 ரன்களில் டஸ்மின் பிரிட்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த மரிசேன் கேப்பும் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.