பும்ராவின் வேகம் எதிரணிக்கு சவாலளிக்கும் - சச்சின் டெண்டுல்கர்
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிக முக்கிய பங்காற்றுவார் என கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருக்கிறது. இப்போட்டி நாளை சவுத்தாம்ப்டனிலுள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிக்கான தண்டாயுதம் மற்றும் 11 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதால், இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Trending
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிக முக்கிய பங்காற்றுவார் என கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின்,“பும்ரா ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர், அவரது பந்து வீச்சு செயல் முறை சற்று வித்தியாசமானது. நான் அவரது பந்துவீச்சுகளை பயிற்சியின் போது எதிர்கொண்டுள்ளேன். நீங்கள் நினைப்பதை விட அவர் மிகவும் வேகமாக பந்து வீசக்கூடியவர். அவருக்கு எதிராக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பதற்கு குறைந்த நேரமே கிடைக்கும்.
அதனால் தான் நான் பேட்ஸ்மேன்களிடன் சொல்வது ஒன்று தான், ஷாட்டை அடிக்க முயற்சிக்கும் முன்பு நீங்கள் உங்களது கணகளை திறந்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கண் சிமிட்டும் நேரத்தில் பும்ரா உங்கள் விக்கெட்டை வீழ்த்தி விடுவார். அதனால் தான் இப்போட்டியில் பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now