
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வுசெய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்ததார்.
மேற்கொண்டு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தரப்பில் ஐசிசி சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை வென்ற ஐந்தாவது வீரர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார்.
Jasprit Bumrah!! pic.twitter.com/DNtfIOnOCd
— CRICKETNMORE (@cricketnmore) January 28, 2025