
Bumrah, Shami, Ishant Should Start For India In WTC Final: Ajit Agarkar (Image Source: Google)
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.
இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே தயாராகி வருகின்றன . வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்திய அணி முன்னெப்போதையும் விட இப்போது மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்,ஆகிய மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கும் நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை அஜித் அகார்கர் தேர்வு செய்துள்ளார்.