
Bumrah's Career Best 6/19 Bowls Out England For 110 In 1st ODI (Image Source: Google)
இங்கிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் மிகச்சிறப்பான பவுலிங்கால் 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் பும்ரா, அவரது கெரியரில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வீசினார்.
இன்னிங்ஸின் 2ஆவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய பும்ரா, அந்த ஓவரிலேயே ஜேசன் ராய் மற்றும் ரூட் ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கினார். அதன்பின்னர் பேர்ஸ்டோ(7), லிவிங்ஸ்டோன்(0), டேவிட் வில்லி(21), கர்ஸ்(15) ஆகியோரது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.