-mdl.jpg)
Bumrah's Career 'More Important' Than T20 World Cup, Says Indian Captain Rohit Sharma (Image Source: Google)
டி20 உலக கோப்பை வரும் நாளை முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த டி20 உலக கோப்பையில் ஜடேஜா, பும்ரா ஆகியோர் காயம் காரணமாக ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு. குறிப்பாக பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு. நன்றாக பவுன்ஸாகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு.
இந்நிலையில் காயம் காரணமாக விலகிய பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.