இந்த வெற்றியைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
எங்களிடம் இங்கு நிறைய ஆட்டங்கள் உள்ளன, அதனால் மேலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அக்ஸர் படேல் 39 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 37 ரன்களையும், கருண் நாயர் 31 ரன்களையும் சேர்த்து அசத்தினர். குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read
பின்னர் இலக்கை நோக்கி விலையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 7, சாய் சுதர்ஷன் 36, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 97 ரன்களையும், ராகுல் திவேத்தியா 11 ரன்களையும் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “ஒரு கட்டத்தில் எதிரணியின் ஸ்கோர் 220-230 ஆக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்திய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கூட 245 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் துரத்திய போது வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றிருந்தோம். அதனால் இது எட்டக்கூடிய இலக்கு என்பது எங்களுக்கு தெரியும்.
ஒருகட்டத்தில் அவர்கள் ஆட்டத்தில் முன்னணியில் இருந்தனர். அச்சமயத்தில் அக்ஸர் படேல் பேட்டிங் செய்துகொண்டிருந்ததால் நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த நினைத்தோம். ஏனெனில் அவரால் வேகப்பந்து வீச்சாளர்களை அடிப்பது கடினம் என்பது தெரியும். அதன் காரணமாகவே சாய் கிஷோரை நாங்கள் பயன்படுத்தவில்லை. இந்த போட்டியில் நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனாலும் எங்களிடம் இங்கு நிறைய ஆட்டங்கள் உள்ளன, அதனால் மேலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். பட்லர் மற்றும் ரூதர்ஃபோர்டு இருவரும் ஸ்டிரைக்கை சுழற்றிய விதம் மற்றும் அவர்களின் அதிரடியான ஆட்டங்கள் மிகவும் அற்புதமானவை. ஏனெனில் அது வெறும் கண்மூடித்தனமான ஹிட்டிங் அல்ல, இது மிகவும் கணக்கிடப்பட்ட பேட்டிங், இது பார்க்க ஒரு விருந்தாக இருந்தது. இந்த வெற்றியைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சிடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now