1-mdl.jpg)
Buttler can return "maybe in the last game or two" against Pakistan (Image Source: Google)
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் தொடர் 2-2 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு ஆணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டி20 போட்டி நாளை லாகூரிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயமடைந்து, தொடரின் முதல் சில போட்டிகளிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மொயீன் அலி இங்கிலாந்து அணியை வழிநடத்தி வருகிறார்.