
Buttler, Leach return to England squad for final Test against India (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குழந்தைப் பிறப்பு காரணமாக நான்காவது டெஸ்டிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர் ஜேக் லீச்சும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.