ஆஃப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா!
ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. மேலும் இத்தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்தது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான், ஆஃப்கானிஸ்தான் உடன் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சங்கடத்தை கொடுத்தால் பிபிஎல் தொடரில் விளையாடி நான் யாருக்கும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் அதில் எனது எதிர்கால பங்களிப்பு குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன்” என்று தெரிவித்ததுடன், கடந்த பிக் பேஷ் லீக் தொடரிலிருந்தும் விலகினார்.
Trending
இதையடுத்து ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி ரத்து செய்வதாக இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஓராண்டு காலமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவானது ஆஃப்கானிஸ்தானின் நிலைமை குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பென் குழந்தைகளின் நிலைமை மோசமாகி வருகிறது. இதன் காரணமாக தான் நாங்கள் முந்தைய தொடரையும் ஒத்திவைத்தோம். இந்நிலையில் தப்போது இந்த நிலை மாறாத காரணத்தால் டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி ஒத்திவைக்கிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மத்தியில் இந்த கிரிக்கெட் போட்டியை வளர்க்க வேண்டும். அதை ஆஃப்கானிஸ்தான் உட்பட, உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்தில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சூழலை வளர்ப்பதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now