ஷிம்ரான் ஹெட்மையர் பல ஆண்டுகளாக இதனை செய்துவருகிறார் - சஞ்சு சாம்சன்!
ஹெட்மையர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் அஷுதோஷ் சர்மா அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது.
Trending
அதிலும் குறிப்பாக அறிமுக வீரர் தனுஷ் கோட்யான் தொடர்ந்து பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். பின் 24 ரன்களில் தனுஷும், 29 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இறுதியில் அந்த அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற சூழலிற்கு தள்ளப்பட்டது.
ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் ச்ஞ்சு சாம்சன், “நாங்கள் களத்தில் சில வேடிக்கையான ஃபில்டிங்கை கடந்த ஆண்டும் சரி, இந்தாண்டும் சரி செய்து வருகிறோம் என நினைக்கிறேன். ஆனால் கேட்ச் பிடிப்பதற்காக அனைத்து வீரர்களும் ஆர்வம் காட்டுவதை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் அவர்கள் கேட்சை பிடிக்க வராமல் இருந்தால் தான் கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பேன்.
இது உண்மையில் சற்று கடினமாக உள்ளது - அரங்கம் முழுவதும் சத்தம் மற்றும் மக்கள் அழைக்கும் போது, நாங்கள் பந்தைப் பார்க்கிறோம், யார் வருகிறார்கள் என்று பார்க்க முடியாது. ஆனால் எனது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் வெறும் கைகளில் பந்தை பிடிப்பதற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பந்தை பிடிப்பது சற்று எளிதானதாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டும். அதேபோல் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சில சுவாரஸ்யமான முடிவுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன.
ஹெட்மையர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். அனுபவம் நிறைந்த அவர் போட்டியை ஃபினிஷிங் செய்து கொடுப்பதில் தனது திறனை மென்மேலும் வளர்த்துள்ளார். இதேபோன்று பலமுறை அவர் எங்களுக்காக போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்துள்ளார். ரோவ்மன் பவல் மற்றும் ஹெட்மையர் இருவரும் எங்களது அணியுடன் இருப்பது கூடுதல் வலிமையைக் கொடுக்கிறது.
மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் ரன்களைச் சேர்க்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேப்போல் கடைசி போட்டியில் நாங்கள் சில சிறந்த விஷயங்களைச் செய்த போது நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம். இன்று, நாங்கள் கொஞ்சம் தவறுகளை செய்தோம், ஆனாலும் இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம். இது மிகவும் வேடிக்கையான விளையாட்டு, எனவே நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now