
துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
அதிரடி வீரர் டேவிட் வார்னர் இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 289 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது வென்றார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
ஆனால், ஐபிஎல் டி20 தொடரின் 2ஆவது சுற்றில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் திறமைையைக் குறைத்து மதிப்பிட்டு அவருக்கு அழுத்தம் கொடுத்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. சில போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக, டேவிட் வார்னருக்கு பேட்டிங் வரவில்லை, ஃபார்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஐபிஎல் தொடரில் அணியிலிருந்து நீக்கி அமரவைத்தது.