
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் இலங்கையும், மற்றொன்றில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கலேவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னடைன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மெலி கெரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூஸி பேட்ஸ் - சோஃபி டிவைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்தார். பின் 31 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் நீண்ட நேர மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 29 ஓவர்கலில் 196 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.