
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டப்லிங்கில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில், முதல் வரிசை வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பல்பிர்னி 4, ஸ்டெர்லிங் 11, டக்கர் ரன்கள் ஏதுமின்றியும் ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து, 5ஆவது இடத்தில் களமிறங்கிய கர்டிஸ் காம்பர் 39, 8ஆவது இடத்தில் களமிறங்கிய பேரி மெக்கர்தி 51ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 139/7 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ஒரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் ஜெய்ஷ்வால் 24, திலக் வர்மா 0 ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். தொடர்ந்து, சாம்சன் களமிறங்கி ரன் அடித்தபோது, மழை குறிக்கிட்டது. இதனால், இந்திய அணி 6.5 ஓவர்களில் 47/2 என்ற நிலையில் இருந்தது.