
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்பது எளிதான ஸ்கோர்தான். பகலில் நடைபெறும் போட்டிகளில் இதுபோன்ற விக்கெட்டை நீங்கள் முதலில் பேட்டிங் செய்வது சற்று கடினமான விசயமாகும். ஏனெனில் டாஸை இழந்து பேட்டிங் செய்யும் போது முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன்.
மேற்கொண்டு எதிரணி எங்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனாலும் பவர்பிளேயில் அவர்கள் ஆட்டத்தை வென்றார்கள் என்று நினைக்கிறேன். கேட்சுகள் போட்டிகளை வெல்லும். அவர்கள் எங்கள் கேட்சுகளையும் தவறவிட்டார்கள், நாங்களும் அவர்களின் கேட்சுகளையும் தவறவிட்டோம். அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் நாங்கள் ஃபீல்டிங்கில் முன்னேறே வேண்டியது அவசியமாகும்.