
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கலேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ் 28 ரன்களிலும், பெர்னடைன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதற்கிடையில் மழை காரணமாக ஆட்டம் 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய மெலி கெர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 40 ரன்களில் மெலி கெர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் சோபி டிவைன் 19 ரன்களுக்கும், மேடி க்ரீன் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 28 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது.