
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - இசபெல்லா கேஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இசபெல்லா கேஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மெலி கெர் 14 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த் சூஸி பேட்ஸ் - சோஃபி டிவைன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸ் 37 ரன்களிலும், சோஃபி டிவைன் 46 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.