
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்களையும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 26 ரன்னிலும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்னிலும், சுனில் நரைன் 36 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகம் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் துஷ்மந்தா சமீரா பவுண்டரி எல்லையில் பிடித்த ஒரு அபாரமான கேட்ச் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.