Dc vs kkr ipl 2025
ஐபிஎல் 2025: சுனில் நரைன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான தொடக்கத்தைப் பெற்றிருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Dc vs kkr ipl 2025
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த துஷ்மந்தா சமீரா - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் துஷ்மந்தா சமீரா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: யுஸ்வேந்திர சஹால் அபாரம்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரமந்தீப் சிங் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் ரமந்தீப் சிங் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 111 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - எம் எஸ் தோனி!
தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்ததில் விளையாடுவது கடினம். அதனால் இந்த அட்டத்தில் எங்களுக்கு ஒருபோதும் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை 103 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24