Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?

எதிர்வாரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 07, 2025 • 09:57 PM

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
January 07, 2025 • 09:57 PM

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. 

Trending

இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சமீப காலங்களில் இந்திய அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இதுதவிர்த்து, தான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியிலும் சதமடித்து முத்திரைப் படைத்துள்ளார். இருப்பினும் எதிர்வாரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் சாம்பியன்ஸ் கொப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியனது இங்கிலாந்து அணிக்கு எதிராக  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் மட்டும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஒருநாள் அணிக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

ஆனால் இதில் முதன்மை விக்கெட் கீப்பர் தேர்வாக ரிஷப் பந்த் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சோபிக்க தவறியுள்ளார். அதேசமயம் சஞ்சு சாம்சன் தொடர்ந்து தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பந்த் தேர்வு செய்யபடுவது தேர்வாளர்களின் பாரபட்சத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து கடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் இடம்பிடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர், உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனது கம்பேக்கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement