
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை (மார்ச் 09) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசத்துமா அல்லது கடந்த 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி இம்முறை மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது இருக்கும் ஃபார்மில் இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான். எனவே இப்போட்டியில் இந்திய அணி அனைவரின் விருப்பமாக இருந்தாலும், நியூசிலாந்தை எளிதாக எண்ண வேண்டாம்.