இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பில்லை - டேனிஷ் கனேரியா!
இந்திய அணிக்கு எதிரானா போட்டியில் பாகிஸ்தான் அணியால் வெற்றிபெற முடியது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்யும். அதேசமயம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.
Trending
அதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியால் வெற்றிபெற முடியது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, சொந்த மண்ணில் நடந்த வெள்ளை பந்து தொடரில் இந்தியா அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது. ரோஹித், விராட் ஆகியோர் ரன்களைச் சேர்த்து வருகின்றனர். அதேசமயம் முகமது ஷமியும் காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்ததுடன், வங்கதேசத்திற்கு எதிராக அபாரமாக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பாபர் ஆசாம் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் போராடுகிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேலை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். மறுபுறம், பாகிஸ்தானில் நல்ல சுழற்பந்து வீச்சாளர் இல்லை, மேலும் விராட் மற்றும் பிற பேட்ஸ்மேன்கள் லெக் ஸ்பின்னருக்கு எதிராக போராடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இந்திய அணியில் இளம் வீரர் ஷுப்மன் கில் தற்போது அபாரமான ஃபார்மில் உள்ளார். அவர் தற்போது இருக்கும் ஃபார்ம் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். அவர் நிச்சயம் இப்போட்டியின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மிகப்பெரிய போட்டாக்கும். ஆனால் நாளை நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now