
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற இருந்த ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் முழுவாதுமாக ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு தலா ஒரு புள்ளியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளுக்கும் அரையிறுதிச்சுற்று வாய்ப்பானது கடினமாகியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 போட்டிகளில் 3 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன. அதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி தங்களுடைய கடைசி போட்டியில் ஆஃப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த இரு அணிகளும் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்நியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்று தாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.