Advertisement

கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்!

ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Chandrakant Pandit To Head Coach IPL Franchise Kolkata Knight Riders
Chandrakant Pandit To Head Coach IPL Franchise Kolkata Knight Riders (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 17, 2022 • 07:28 PM

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கேகேஆர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார். இதையடுத்து கேகேஆர் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 17, 2022 • 07:28 PM

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending

கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் - புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார். 

2022 ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணி 14 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7ஆம் இடத்தைப் பிடித்தது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. 41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல முக்கியக் காரணம் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் (60). 

இந்திய அணிக்காக 5 டெஸ்டுகளும் 36 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியவர் பண்டிட். ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை, மத்தியப் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியில் ரஞ்சி கோப்பையை வென்ற அணிகள்

  • 2002-03: மும்பை
  • 2003-04: மும்பை
  • 2015-16: மும்பை
  • 2017-18: விதர்பா
  • 2018-19: விதர்பா
  • 2021-22: மத்தியப் பிரதேசம்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement