
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதிய ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக பல்வேறு இழுபறிக்கு பிறகு நடைபெற்றது. பரபரப்பாக சென்ற ஆட்டத்தில், கடைசி ஓவர் கடைசி பந்து வரை சென்று சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்தது. சீசன் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் முகமது சமி 28 விக்கெட்டுகள், ரசித் கான் 27 விக்கெட்டுகள், மோகித் சர்மா 27 விக்கெட்டுகள் என முதல் மூன்று இடங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் பவுலர்கள் இருக்கின்றனர் பேட்டிங்கில். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் ஷுப்மன் கில். இவர் ஐந்து அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் உட்பட 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார். இறுதியில் ஆரஞ்சு தொப்பி, அதிக மதிப்பு மிக்க வீரர் விருது, போட்டியை மாற்றக்கூடிய கேம் செஞ்சர் விருது என முன்னணி விருதுகள் அனைத்தும் கில் வசம் சென்றது. பல்வேறு விருதுகளை குவித்தாலும், இறுதியில் அவர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற வருத்தம் இருப்பதாக கில் தெரிவித்துள்ளார்.