
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற நான்காவது டி20 போட்டி ஏறத்தாழ முதல் இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயில் மழை காரணமாக ஆட்டம் பாதிலேயே தடைப்பட்டு, பின்னர் ரத்துசெய்யப்பட்டது. இதனால் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியிலுள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கேப்டன் பாபர் ஆசாம் 19 ரன்களில் அட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமான், சைம் அயூப் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் இறுதிவரை களத்தில் இருந்து 7 பவுண்டர், 4 சிக்சர்கள் என 98 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அவர் சதமடிப்பார் என எதிர்பார்பார்க்கப்பட்ட நிலையில் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.