
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது எதிராக 27 வருடங்களுக்கு பின், அதாவது 1997ஆம் ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்ற இலங்கை அணியின் புதிய கேப்டனாக செயல்பட்ட சரித் அசலங்கா சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார்.