
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி இறுதிப் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்படி நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஆண்டின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி வரும் சனிக்கிழமை துவங்க உள்ள நிலையில் தற்போது அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பெங்களூருவில் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை வாங்கியது.
அதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களை வைத்து தற்போது பலமான பிளேயிங் லெவனை கட்டமைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியும் தற்போது தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து பிளேயிங் லெவன் காம்பினேஷனை தயார் செய்து விட்டது என்றே கூறலாம்.