சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார். தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து கடும் தோல்வியைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணிக்குக் கீழே இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே அவரின் ஆட்டம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. இருப்பினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார்.
Trending
இந்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக அத்தொடரில் அவரால் விளையாட முடியவில்லை. தற்போது, இதன் காரணமாக ஸ்டோக்ஸின் ஆட்டத் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இதற்கான அறிவிப்பை சிஎஸ்கே வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்டோக்ஸ் தனக்கு ஏற்பட்ட கணுக்கால் பிரச்னைக்காக அறுவை சிகிச்சையை செய்து மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now