
இந்தியாவின் உள்நாட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இருந்து வருகிறது. இது ஒரு தனியார் அமைப்பாக இருந்தாலும், சில நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.
இந்நிலைய்ல் பிசிசிஐ உள்நாட்டில் பந்து வீசும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலரின் பந்து வீசும் முறையில் குறைபாடுகளை கண்டுள்ளதாகவும், அவர்களின் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் குறிப்பிட்ட வீரர்களின் மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
இதன்படி இந்திய அணிக்கு ஒரு ஒருநாள் போட்டியிலும், இரண்டு டி20 போட்டியிலும் விளையாடி உள்ள சௌராஷ்டிராவை சேர்ந்த 25 வயதான இடது கை இளம் வேத பந்துவீச்சாளர் சேத்தன் சர்க்காரியா பந்துவீச்சு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது. இவர் ஐபில் தொடரின் ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார்.