
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒருசில மாதங்களே இருப்பதால் அதற்குள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை அண்மையில் மும்பையில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரு தரப்பும் இணைந்து வெளியிட்டது. இந்த வருட உலககோப்பையில் அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளிக்கக்கூடிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் சிரமம் இன்றி பலரும் பார்க்கலாம். அதற்குள் அகமதாபாத் மைதானத்திற்கு அருகே இருக்கும் ஹோட்டல் அறைகளின் விலை அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விண்ணளவிற்கு உயர்ந்திருக்கிறது. சராசரியாக 3000 ரூபாய்க்கு இருக்கும் ஹோட்டல் அறைகள் தற்போது 30 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில ஹோட்டல்களில் ஒரு லட்சம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிறிஸ் கையில் அண்மையில் பேசிய பேட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பற்றி பேசினார். அப்போது, “கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க உலகமே ஆவலோடு காத்திருக்கும். இது போன்ற ஒரு போட்டியில் கிடைக்கும் வருமானமே மொத்த ஐசிசி தொடரையும் நடத்தும் அளவிற்கு இருக்கும்.