
பயோ பபுள் பாதுகாப்பு சூழலில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவிற்கு சென்று பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலிய திரும்பினர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் மட்டும் மாலத்தீவில் தனது பொழுதை கழித்து வருகிறார். அவ்வப்போது தனது சேட்டை காணொளிகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ‘பஞ்சாப் சிங்' போல் வேடமணிந்து காணொளியை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ் கெயில் தற்போது ‘பஞ்சாபி டாடி' என்ற பாடலில் நடித்து வருகிறார். அதற்காக டர்பன் அணிந்து முழுவதுமாக சிங்காக மாறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் ‘படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்துள்ளேன், பஞ்சாபி டாடி தெறிக்கவிட போகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.