ஆர்சிபி கோப்பை வெல்லாததற்கு இதுதான் காரணம் - கிறிஸ் கெயில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் அந்த அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகின்ற 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதுவரை நடைபெற்ற 15 ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இவை தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும், ஹைதராபாத் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் கடந்த 15 சீசன்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாடியும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை . குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்று முறை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது . ஆனாலும் அவர்களால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி ஒரு ராசி இல்லாத அணியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
Trending
விராட் கோலி, கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன், கெவின் பீட்டர்சன், மிச்செல் ஸ்டார்க் என திறமையான வீரர்கள் கடந்த காலங்களில் அந்த அணியில் இருந்தும் அவர்களால் கோபியை வெல்ல முடியாதது ஒரு ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் தொடக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய கெயில், “ஆர் சி பி அணியில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான வீரர்கள் தங்களை அந்த அணியின் ஒரு பகுதியாக நினைக்கவில்லை எனக் கூறினார். அணியின் மொத்த பார்வையும் எனது மீதும் விராட் மற்றும் ஏபிடி ஆகியோரின் மீது இருப்பதாக அந்த வீரர்கள் நினைத்தனர். அவர்கள் தங்களை அணியின் ஒரு பகுதியாக நினைக்கவில்லை. இப்படியாக வீரர்களின் மனநிலை இருக்கும் போது ஒரு அணியால் கோப்பையை வெல்வது கடினம் என கூறினார். அதுதான் ஆர்சிபி அணி இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாததற்கு காரணமாக தான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now