இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று -ரிக்கி பாண்டிங்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கால் எதிரணிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் என்று 543 ரன்களை விளாசியுள்ளார். நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி சச்சினின் சாதனையையும் முறியடித்து அசத்தினார்.
ஆடுகளங்களுக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப விளையாடுவதில் விராட் கோலி கில்லியாக செயல்பட்டு வருவது சர்வதேச ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. 3 ஆண்டுகளாக ஃபார்மின்றி தவித்த விராட் கோலியால் மீண்டு வர முடியாது என்று சில மாதங்களுக்கு விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் விராட் கோலி உச்சத்திற்கு சென்றுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், “சமகாலத்தில் விராட் கோலி தான் மிகச்சிறந்த வீரர் என்பதை நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். தற்போது அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் ஜாம்பவான் வீரர் என்பதை நிரூபிக்க சச்சினின் சாதனைகளை எல்லாம் முறியடிக்க தேவையில்லை. அவரது பேட்டில் இருந்து விளாசப்பட்ட ரன்களை பார்த்தாலே போதுமானது.
சச்சினின் சாதனையை முறியடிக்க கூடுதலாக அழுத்தத்துடன் இருந்தார் என்று நினைக்கிறேன். அது அரையிறுதி சுற்றுக்கு முன்பாக நடந்துள்ளது. இதனால் விராட் கோலி கூடுதல் சுதந்திரத்துடன் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட போகிறார். சரியான நேரத்தில் விராட் கோலி சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளது அவருக்கும் இந்திய அணிக்கும் நன்மையாக அமைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.
அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று. ஏனென்றால் எதிரணிகள் பும்ரா எப்படி சமாளிப்பது, சிராஜை எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறார்கள். ஒருவேளை அவர்களை கடந்து சென்றாலும், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் வைத்து விக்கெட் வீழ்த்திவிடுகிறார்கள். இந்திய அணியின் அனைத்து பவுலர்களும் விக்கெட் டேக்கராக இருப்பது எதிரணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now