டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணியின் திட்டம் என்னவென்பது குறித்து பயிற்சியாளர் ராகுல்ட் டிராவிட் கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் இந்தியா தனது முழு பலத்தையும் காட்டி போராடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4ஆவது இடத்தில் இருந்து வருகிறது. முதல் 2 இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உள்ளன.
Trending
இலங்கை அணி 3ஆவது இடத்தில் உள்ளது. எனவே இவர்களை மீறி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்து வரும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் இல்லாமல், மீதமுள்ள 4 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இந்த தொடர் இந்திய மண்ணில் தான் நடைபெறும். எனவே பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா தகுதிப்பெற்றுவிடுமா என இந்திய டெஸ்ட் அணி மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டிராவிட், “ஒரு நேரத்தில் ஒரு படியை தான் தாண்ட நினைக்க வேண்டும். நேரடியாக 6ஆவது படியில் காலை வைக்க வேண்டும் என்றால் அது நடக்காது அல்லவா? எனவே இறுதிப்போட்டி மீது கவனமே இப்போது இல்லை. ஒவ்வொரு போட்டியின் மீதும் அதிக கவனம் வைத்துள்ளோம். முதலில் இந்த முதல் டெஸ்டில் வென்றவுடன் டாக்காவுக்கு செல்ல முயற்சிக்க வேண்டும். அப்போது தான் வீரர்களும் அழுத்தம் இன்றி இருப்பார்கள்.
தொடர்ச்சியாக 6 வெற்றிகள் வேண்டும் என்ற சவால் எனக்கு புரிகிறது. ஆனால் பின்னால் வரும் போட்டிகளை நினைத்துக்கொண்டே இன்று கவனம் சிதறிவிடக்கூடாது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுடன் மோதுவதில் உள்ள திட்டங்கள் குறித்து யோசிப்போம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now