ஜடேஜாவின் நிலை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துபாயில் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாலும் தற்போது பாகிஸ்தான் அசுர பலத்தில் உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களச் சந்தித்து பேசினார்.
Trending
அப்போது பேசிய அவர், “எங்களுடைய கவனம் எல்லாம் பாகிஸ்தான் போட்டியில் மீது தான் இருக்கிறது. எங்கள் அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் எப்படி விளையாடுகிறோமோ அப்படித்தான் பாகிஸ்தான் போட்டியையும் எதிர்கொள்கிறோம். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நஷிம் ஷா சிறப்பாக செயல்படுகிறார்.
இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்திருக்கிறார்கள். நாங்கள் பாகிஸ்தானிடம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதை விட எங்கள் அணியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை மட்டும் தான் பார்க்கிறோம். இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு செய்வது குறித்து பேசிய பயிற்சியாளர் டிராவிட், ஆவேஷ் கான் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய அணியை தேர்வு செய்வது ஒரு மகிழ்ச்சியான தலைவலி தான். எங்கள் அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மாற்று வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இதனால் முக்கிய வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் கூட போகலாம். இது குறித்து நான் வீரர்களிடம் பேசி இருக்கிறேன். நீங்கள் அணியில் இடம்பெறாமல் போனதற்கு உங்களுடைய திறமை காரணம் அல்ல என்பதை புரிய வைத்திருக்கிறேன். உலகக் கோப்பைக்காக எங்கள் திட்டமிடுதல் மிகவும் பெரியது.
நாங்கள் அணிக்கு தேவையான பல வீரர்களை உருவாக்கினோம். ஒவ்வொரு இடத்திற்கும் மாற்று வீரர்கள் தயார் செய்தோம். கொரோனா மற்றும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வகையில் அணியை தயார் செய்தோம். ஆசிய கோப்பை தொடரில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை.சிறந்த அணியே களமிறக்க நினைத்தோம். விராட் கோலி எவ்வளவு ரன் அடிக்கிறார் என்பதையே அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
ஆனால் அவர் அணிக்காக சிறிய பங்களிப்பை அளித்தால் கூட அது எங்களுக்கு முக்கியமானது தான். ஜடேஜாவுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். ஆனால் டி20 உலக கோப்பைக்கு இன்னும் சில காலம் இருக்கிறது. இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது.
அவர் வெளியேறிவிட்டார் என்று என்னால் சொல்ல முடியாது. மருத்துவர்கள் கண்காணிப்பில் ஜடேஜா தற்போது இருக்கிறார். அவர்கள் தரும் அறிக்கையின் படியே எங்களால் முடிவு எடுக்க முடியும். இதனால் தற்போது ஜடேஜா டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகிவிட்டார் என்று நான் கூற மாட்டேன்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now