
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று பத்திரிகையாளர்களிடம் வைத்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை கிளப்பியது. கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கோலியிடம் வலியுறுத்தியதாக கங்குலி விளக்கம் அளித்திருந்தார். ஆனால் கங்குலி கூறுவது பொய் என்பது போல விராட் கூறியுள்ளார்.
இதனால் இந்த விவகாரத்தில் யார் தான் பொய் கூறி வருகிறார்கள் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியபோதே ஒருநாள் அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ய பிசிசிஐ கோரியிருக்கலாம். ஆனால் அப்படி எதையும் செய்யாதது தற்போது இந்த பூகம்பத்திற்கு காரணமாகியுள்ளது. எனவே இன்று மாலைக்குள் கங்குலி தகுந்த விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மிக முக்கியமான தொடர்கள் அருகில் உள்ளது. இந்த நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு வருவது கொஞ்சம் கூட சரியில்லை. இவற்றையெல்லாம் யோசிக்கவே மாட்டீற்களா? தயவு செய்து தென் ஆப்பிரிக்க தொடரில் கவனம் செலுத்துங்கள்.