இதுவே எனது கடைசி ஐபிஎல் போட்டி - மனம் திறந்த கிறிஸ் லின்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ப
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதுகுறித்து போட்டி முடிவுக்கு பிறகு பேசிய கிறிஸ் லின், இதுவே எனது கடைசி போட்டி என நினைத்தேன் என்று தெரிவித்தார்.
Trending
இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில், ‘அணியின் கேப்டனை தனது முதல் போட்டியிலேயே ரன் அவுட் செய்ய யாரும் எதிர்பார்ப்பது அல்ல. அதனால் எனது முதல் போட்டியே எனது கடைசி போட்டி என்றும் நினைத்தேன். ஆனால் இதனை யாரும் வேண்டுமென்றே செய்வதில்லை. இது ஆட்டத்தின் ஒரு பகுதி தான் என்று உணர்ந்ததும் தான், நான் எனது ஆட்டத்தை தொடர்ந்தேன்’ என்று தெரிவித்தார்.
நேற்றைய போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான கிறிஸ் லின் 35 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசி 49 ரன்களைச் செர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now