
CPL 2021: Guyana Amazon Warriors reach 142/7 from their 20 overs (Image Source: Google)
நடப்பாண்டு சிபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய கயானா அமேசன் வாரியர்ஸ் அணியில் பிராண்டன் கிங், ஹெம்ராஜ் ஆகியோர் சொற்ப ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றினர். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையைக் கட்ட அணியின் ஸ்கோர் வீழ்ச்சியை நோக்கி சென்றது.
இருப்பினும் 4ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சிம்ராஹ் ஹெட்மையர் மட்டும் நின்று விளையாடி அரைசதமடித்து அசத்தினார்.