
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் அதிரடி வீரர்கள் லூயிஸ், கிறிஸ் கெயில், ஆசிஃப் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரூதர்ஃபோர்ட் - டுவைன் பிராவோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ரூதர்ஃபோர்ட் அரைசதமடித்தும் அசத்தினார். பின் 53 ரன்களில் ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுவைன் பிராவோ 47 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. பார்போடாஸ் அணி தரப்பில் ஒஷேன் தாமஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.