CPL 2021: Patriots stay unbeaten after Cottrell's final-ball six (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவில் பேட்ரியாட்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணி சமித் படேலின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதில் சமித் படேல் 54 ரன்களை எடுத்தார். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பேட்ரியாட்ஸ் அணியில் டேவன் தமஸ், கிறிஸ் கெயில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் கடைசி 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.