
CPL 2021: Russel on fire; Jamaica Tallawahs finished with 255/5 (Image Source: Google)
நடப்பாண்டு சிபிஎல் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா தலாவாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தலாவாஸ் அணிக்கு லூயிஸ் - வால்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லூயிஸ் 48 ரன்களிலும், வால்டன் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய ஹைதர் அலி - ரோவ்மன் பாவல் இணை மைதானத்தில் சிக்சர் மழை பொழிதது. பின் 18ஆவது ஓவரை வீசிய ஓபெட் மெக்காய் அடுத்தடுத்து பாவல், ஹைதர்ல் ஹலி, பிராத்வையிட் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.