
CPL 2021: TKR jump to second spot as Fletcher's fighting knock goes in vain (Image Source: Google)
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்களையும், டிம் செய்ஃபெர்ட் 37 ரன்களையும் சேர்த்தனர். கிங்ஸ் அணி தரப்பில் கேசரிக் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய கிங்ஸ் அணியில் ரகீம் கார்ன்வால் 8, ஃபாஃப் டூ பிளெசிஸ் 14, ரோஸ்டன் சேஸ் 0, மார்க் டியால் 14, டிம் டேவிட் 0 என எடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.