
CPL 2021: Udana fifer downs Barbados Royals (Image Source: Google)
சிபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கிளென் பிலீப்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின்னர் வந்த ஆசம் கானும் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்த்தார். ஆனால் அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 19.2 ஓவர்களிலேயே பார்போடாஸ் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் இசுரு உதானா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.