பந்துவீசிய கையோடு அசத்தலான கேட்ச்சை பிடித்த கிறிஸ் ஜோர்டன்; காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியின் போது நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும்ம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கைல் மேயர்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்து அசத்தினர்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியிலும் ஜேசன் ராய் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்திய ஜேசன் ராய் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், இறுதிவரை ஆடமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 93 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 18.3 ஓவச்ர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு உதவிய நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Skills, Jordan!
Win Big, Make Your Cricket Tales Now