
Cricket Australia announced their T20 World Cup squad (Image Source: Google)
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் துணைக்கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.